• May 04 2024

பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிரினால் சிறுவர்கள் மூவர் பலி!

Chithra / Dec 13th 2022, 7:57 am
image

Advertisement


பிரித்தானியாவில் ஆண்டின் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் கிழக்கில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள சோலிஹுல் அருகே நேற்று பனிக்கட்டி ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சோகத்தைத் தொடர்ந்து பனிக்கட்டிகளின் ஆபத்துகள் தொடர்பில் குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறு பொலிஸார் மற்றும் தீயணைப்பு சேவைகள் பெற்றோரை கேட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பனி மற்றும் பனி உருகுதல் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பல விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


அதேவேளை ஸ்கொட்லாந்து, லண்டன் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வானிலை அதிகாரிகள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் மேலும் குளிர்கால மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நிலவம் சீரற்ற காலநிலை புகையிரதங்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு கடுமையான பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.


புகையிரத பாதைகள் - குறிப்பாக பிரித்தானியாவின் தென்கிழக்கு மற்றும் கிழக்கில் புகையிரத சேவைகள் தொடர்ந்து தடைபட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் வாகனம் ஓட்டுவது கடினமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் மற்றும் தீயணைப்பு சேவைகள் பிரிவினர் பிரித்தானிய மக்களை கேட்டுகொண்டுள்ளனர். 

பிரித்தானியாவில் நிலவும் கடும் குளிரினால் சிறுவர்கள் மூவர் பலி பிரித்தானியாவில் ஆண்டின் மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் கிழக்கில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள சோலிஹுல் அருகே நேற்று பனிக்கட்டி ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த சோகத்தைத் தொடர்ந்து பனிக்கட்டிகளின் ஆபத்துகள் தொடர்பில் குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறு பொலிஸார் மற்றும் தீயணைப்பு சேவைகள் பெற்றோரை கேட்டு கொண்டுள்ளனர்.இந்நிலையில், நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.மோசமான வானிலை காரணமாக ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பனி மற்றும் பனி உருகுதல் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அத்துடன், பல விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஸ்கொட்லாந்து, லண்டன் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வானிலை அதிகாரிகள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், இந்த வாரம் மேலும் குளிர்கால மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் நிலவம் சீரற்ற காலநிலை புகையிரதங்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு கடுமையான பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.புகையிரத பாதைகள் - குறிப்பாக பிரித்தானியாவின் தென்கிழக்கு மற்றும் கிழக்கில் புகையிரத சேவைகள் தொடர்ந்து தடைபட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் வாகனம் ஓட்டுவது கடினமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இந்நிலையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் மற்றும் தீயணைப்பு சேவைகள் பிரிவினர் பிரித்தானிய மக்களை கேட்டுகொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement