• Dec 05 2024

பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி மீது தாக்குதல்!

Tamil nila / Dec 3rd 2024, 6:49 pm
image

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். 

 தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். 

 அத்துடன் இந்த விடயம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். 

 இதேவேளை, அவரை தொடர்ந்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி மீது தாக்குதல் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.  தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.  அத்துடன் இந்த விடயம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.  இதேவேளை, அவரை தொடர்ந்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement