• May 05 2024

அரக்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சி! ஜே.வி.பி. samugammedia

Chithra / Apr 2nd 2023, 3:48 pm
image

Advertisement

அரக்கத்தனமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கொண்டுவரும் நோக்கிலே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் மிக மோசமான நிலை தோன்றியுள்ளது. இதற்குக் காரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் 1979 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம். 

அதேபோல் நாட்டிலுள்ள இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிராகக் குரல்கொடுத்த, மோசடிகளை அம்பலப்படுத்திய மற்றும் ஆளும் தரப்பினருக்கு எதிராகக் குரல்கொடுத்த அனைத்து ஊடகவியளாளர்கள் உட்பட மக்களையும்  காவுகொண்ட சட்டமாகவும் காணப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலமானது பத்திரிகையில் எழுதுவதாக இருந்தாலும் சரி முகநூலில் கருத்துக்களைப் பகிர்வதாயினும் சரி அக் கருத்துக்கள் அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ எதிரான கருத்துக்களாக அமையுமாயின் கருத்துத் தெரிவித்தவர்களை வேட்டையாடும் சட்டமூலமாகக் காணப்படவுள்ளது.

ரணில் ராஜபக்ச பாாளுமன்றத்தில் இருக்கின்ற 134 பேரின் விருப்பே தவிர மக்களால் தெரிவு செய்யப்படாது தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு வருகின்றார்.

உயர்தரப் பரீட்சை  நடைபெறும் காலங்களில்  மின்சாரத்தை துண்டிக்காது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பரீட்சை முடிவதற்கு முதல் தினத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மக்களுடைய, மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத ஜடமாகக் காணப்படுகின்றார்.

இவ்வாறு அரக்கத்தனமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கொண்டுவரும் நோக்கிலே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.

நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு சட்டமானது 30 வருட போருக்கு வழி வகுத்ததுடன் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவும் வழி வகுத்துள்ளது.

இதேவேளை இளைஞர்கள் ஆயுதமேந்த வழிகோலியதும் இவ்வாறான சட்டங்களே ஆகும். இத்துடன் இதே காலப்பகுதியில் எமது யாழ்ப்பாணம் பொது நூலகமானது எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இவ்வாறு நூலகத்தை எரித்ததன் மூலம் தமிழர்களின் தன்மானத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எனவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்து ஜனநாயகத்தையும் மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் அழிக்கும் ரணில் ராஜபக்சாக்களின் செயற்பாட்டுக்கெதிராக நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளும் மக்களும் போராட வேண்டும். - என்றார்

அரக்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சி ஜே.வி.பி. samugammedia அரக்கத்தனமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கொண்டுவரும் நோக்கிலே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்பொழுது நாட்டில் மிக மோசமான நிலை தோன்றியுள்ளது. இதற்குக் காரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் 1979 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம். அதேபோல் நாட்டிலுள்ள இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிராகக் குரல்கொடுத்த, மோசடிகளை அம்பலப்படுத்திய மற்றும் ஆளும் தரப்பினருக்கு எதிராகக் குரல்கொடுத்த அனைத்து ஊடகவியளாளர்கள் உட்பட மக்களையும்  காவுகொண்ட சட்டமாகவும் காணப்படுகின்றது.எதிர்வரும் காலங்களில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலமானது பத்திரிகையில் எழுதுவதாக இருந்தாலும் சரி முகநூலில் கருத்துக்களைப் பகிர்வதாயினும் சரி அக் கருத்துக்கள் அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ எதிரான கருத்துக்களாக அமையுமாயின் கருத்துத் தெரிவித்தவர்களை வேட்டையாடும் சட்டமூலமாகக் காணப்படவுள்ளது.ரணில் ராஜபக்ச பாாளுமன்றத்தில் இருக்கின்ற 134 பேரின் விருப்பே தவிர மக்களால் தெரிவு செய்யப்படாது தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு வருகின்றார்.உயர்தரப் பரீட்சை  நடைபெறும் காலங்களில்  மின்சாரத்தை துண்டிக்காது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பரீட்சை முடிவதற்கு முதல் தினத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மக்களுடைய, மாணவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத ஜடமாகக் காணப்படுகின்றார்.இவ்வாறு அரக்கத்தனமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் கொண்டுவரும் நோக்கிலே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு சட்டமானது 30 வருட போருக்கு வழி வகுத்ததுடன் இனக்கலவரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவும் வழி வகுத்துள்ளது.இதேவேளை இளைஞர்கள் ஆயுதமேந்த வழிகோலியதும் இவ்வாறான சட்டங்களே ஆகும். இத்துடன் இதே காலப்பகுதியில் எமது யாழ்ப்பாணம் பொது நூலகமானது எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இவ்வாறு நூலகத்தை எரித்ததன் மூலம் தமிழர்களின் தன்மானத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.எனவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்து ஜனநாயகத்தையும் மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் அழிக்கும் ரணில் ராஜபக்சாக்களின் செயற்பாட்டுக்கெதிராக நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளும் மக்களும் போராட வேண்டும். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement