• May 18 2024

இரவில் அதிரடி காட்டும் மட்டக்களப்புப் பொலிஸார்! samugammedia

Chithra / Jul 19th 2023, 1:29 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி இரவில் பயணிக்கும் பேருந்துகளைக்   கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் நேற்றைய தினம்  இரவு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச்  செல்லும் மற்றும் மாவட்டத்துக்குள் நுழையும் பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை இரவு 11 மணிவரை முன்னெடுத்தனர் இதன் போது போக்குவரத்து அனுமதிபத்திரம் சாரதி அனுமதிபத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்களையும் சோதனையிட்டு பதிவேட்டில் பதிந்ததுடன், வீதி போக்குவரத்தை மீறி பயணித்த பேருந்துகளை  எச்சரித்து அனுப்பியதுடன் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மோட்டர் சைக்கிள் ஒன்றையும்  கையப்பறியுள்ளனர்.

இதேவேளை அம்பாறை அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, கல்முனை, நிந்தவூர், களுவாஞ்சிக்குடி, கத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து அனுமதிபத்திரமின்றி கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இரவு வேளைகளில் போக்குவரத்து சேவையில் சுமார் 11 பஸ்வண்டிகள் ஈடுபடுவதாகத்  தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த  பேருந்துகளைக் கண்டறிந்து அவைகளை கைப்பற்றி நீதிமன்றல் வழக்கு தொடர்வதற்காக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து இரவு வேளைகளில் இடம்பெறும் எனவும்  மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


இரவில் அதிரடி காட்டும் மட்டக்களப்புப் பொலிஸார் samugammedia மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி இரவில் பயணிக்கும் பேருந்துகளைக்   கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அந்தவகையில் நேற்றைய தினம்  இரவு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச்  செல்லும் மற்றும் மாவட்டத்துக்குள் நுழையும் பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை இரவு 11 மணிவரை முன்னெடுத்தனர் இதன் போது போக்குவரத்து அனுமதிபத்திரம் சாரதி அனுமதிபத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்களையும் சோதனையிட்டு பதிவேட்டில் பதிந்ததுடன், வீதி போக்குவரத்தை மீறி பயணித்த பேருந்துகளை  எச்சரித்து அனுப்பியதுடன் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மோட்டர் சைக்கிள் ஒன்றையும்  கையப்பறியுள்ளனர்.இதேவேளை அம்பாறை அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, கல்முனை, நிந்தவூர், களுவாஞ்சிக்குடி, கத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து அனுமதிபத்திரமின்றி கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இரவு வேளைகளில் போக்குவரத்து சேவையில் சுமார் 11 பஸ்வண்டிகள் ஈடுபடுவதாகத்  தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த  பேருந்துகளைக் கண்டறிந்து அவைகளை கைப்பற்றி நீதிமன்றல் வழக்கு தொடர்வதற்காக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து இரவு வேளைகளில் இடம்பெறும் எனவும்  மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement