• Jan 20 2025

பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் இரத்து: விரைவில் சட்டமூலம் - ஜனாதிபதி அதிரடி

Chithra / Jan 20th 2025, 8:33 am
image

 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்களை எதிர்வரும் மாதத்துக்கு பின்னர் ஏலத்துக்கு விடுவேன். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நிதியை திறைச்சேரிக்கு அனுப்புமாறு உரிய அமைச்சுகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் தற்போது திணறுகிறார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன்.

பாராளுமன்றத்துக்கு உணவு பொதியுடன் வருமாறு குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தில் உணவு பெறுவதாயின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். 

ஒரு வேளை உணவுக்கு 2000 ரூபாய் செலவாகுமாயின் உறுப்பினர்கள் 2000 ரூபாவை செலுத்த வேண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது. இந்த மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தார்கள்.என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் இரத்து: விரைவில் சட்டமூலம் - ஜனாதிபதி அதிரடி  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.களுத்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,முன்னாள் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய வாகனங்களை எதிர்வரும் மாதத்துக்கு பின்னர் ஏலத்துக்கு விடுவேன். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நிதியை திறைச்சேரிக்கு அனுப்புமாறு உரிய அமைச்சுகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் தற்போது திணறுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன்.பாராளுமன்றத்துக்கு உணவு பொதியுடன் வருமாறு குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தில் உணவு பெறுவதாயின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு வேளை உணவுக்கு 2000 ரூபாய் செலவாகுமாயின் உறுப்பினர்கள் 2000 ரூபாவை செலுத்த வேண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது. இந்த மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தார்கள்.என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement