• Nov 24 2024

வாய்க்காலில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - மட்டக்களப்பில் சோகம்! samugammedia

Tamil nila / Dec 7th 2023, 8:30 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரதன் என்னும் 33வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

தமது கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்யதுகொண்டு திரும்பியவரே இவ்வாறு வாய்க்காலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நீண்டகாலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்து மருத்துவசிகிச்சையும் பெற்றுவந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்ப போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


வாய்க்காலில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - மட்டக்களப்பில் சோகம் samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரதன் என்னும் 33வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.தமது கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்யதுகொண்டு திரும்பியவரே இவ்வாறு வாய்க்காலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் நீண்டகாலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்து மருத்துவசிகிச்சையும் பெற்றுவந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கோக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்ப போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement