• May 05 2024

ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி கிழக்கில் பௌத்த விகாரை...! விக்னேஸ்வரன் எம்.பி விசனம்...!samugammedia

Sharmi / Oct 19th 2023, 2:34 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய கட்சிகள் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அங்கு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி எதைச் சொன்னாலும் கிழக்கில் எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள்.

குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைமையை அனைத்துத் தரப்பினர்களுக்கும் உணர்த்தும் வகையில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள நாம் அனைவருமாக இணைந்து ஹர்த்தால் செய்வதற்குத் தீர்மானித்து உள்ளோம்.

மட்டக்களப்பிற்கு சென்று கட்சி உறுப்பின்ர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தேன்.

அதன் போது அங்குள்ள பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். அந்த மக்களின் கால்நடைகளை அல்லாமல் செய்து, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து, சிங்கள மயமாக்குகின்ற வகையில் தொடர்ந்தும் பல்வேறு வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மிக மிக மோசமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபாய நிலைமையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாவட்டத்திற்கு சென்ற போதும் அவர்களைச் சந்திக்காமலேயே சென்றிருக்கின்றார்.

இவ்வாறான நிலைமையில் சில தினங்களிற்கு முன்னர் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்க வேண்டுமென்று அறிவித்திருக்கின்றார்.

ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்த பின்னர் கூட அங்கிருந்த தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை விரட்டி அனுப்புகின்ற நிலைதான் உள்ளது.

ஆக, ஜனாதிபதி எதைச் சொன்னா லும் அங்கு எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள்.

குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில்  பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் வெளிநாடு செல்கின்றனர். தமிழ் மக்கள் மீது அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் பலரும் வெளிநாடுகளுக்கே சென்று விடுவார்கள். ஆக மொத்தத்தில் அரசு திட்டமிட்ட வகையில் தன்னுடைய நடவடிக்கைகளைச் செய்தால் இப்படி தமிழ் மக்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லுகிற நிலைமை இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி கிழக்கில் பௌத்த விகாரை. விக்னேஸ்வரன் எம்.பி விசனம்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் வெளியிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் நேற்றையதினம் தமிழ்த் தேசிய கட்சிகள் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டனர்.இந்நிலையில் அங்கு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி எதைச் சொன்னாலும் கிழக்கில் எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் இன்றைய நிலைமையை அனைத்துத் தரப்பினர்களுக்கும் உணர்த்தும் வகையில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள நாம் அனைவருமாக இணைந்து ஹர்த்தால் செய்வதற்குத் தீர்மானித்து உள்ளோம். மட்டக்களப்பிற்கு சென்று கட்சி உறுப்பின்ர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தேன். அதன் போது அங்குள்ள பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். அந்த மக்களின் கால்நடைகளை அல்லாமல் செய்து, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து, சிங்கள மயமாக்குகின்ற வகையில் தொடர்ந்தும் பல்வேறு வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மிக மிக மோசமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபாய நிலைமையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாவட்டத்திற்கு சென்ற போதும் அவர்களைச் சந்திக்காமலேயே சென்றிருக்கின்றார். இவ்வாறான நிலைமையில் சில தினங்களிற்கு முன்னர் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்க வேண்டுமென்று அறிவித்திருக்கின்றார். ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்த பின்னர் கூட அங்கிருந்த தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை விரட்டி அனுப்புகின்ற நிலைதான் உள்ளது.ஆக, ஜனாதிபதி எதைச் சொன்னா லும் அங்கு எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில்  பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் வெளிநாடு செல்கின்றனர். தமிழ் மக்கள் மீது அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் பலரும் வெளிநாடுகளுக்கே சென்று விடுவார்கள். ஆக மொத்தத்தில் அரசு திட்டமிட்ட வகையில் தன்னுடைய நடவடிக்கைகளைச் செய்தால் இப்படி தமிழ் மக்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லுகிற நிலைமை இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement