• Jan 19 2025

காசாவில் 15 மாதங்களுக்கு பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் !

Tharmini / Jan 16th 2025, 9:34 am
image

காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரினை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் காசாவில் உள்ள பணயக்கைதிகளும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். என்றும் ஜனவரி 19-ம் திகதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

காசாவில் 15 மாதங்களுக்கு பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரினை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் மூலம் காசாவில் உள்ள பணயக்கைதிகளும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும். என்றும் ஜனவரி 19-ம் திகதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement