• May 18 2024

கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு! samugammedia

Chithra / Apr 23rd 2023, 5:08 pm
image

Advertisement

தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள் அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம் இடம்பெறும் கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் என்பது 1979 களில் கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால் அப்போது அது தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்றும் இதனால் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்றும், தற்போது கொண்டு வர இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானது என்றும், இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் இணைந்து போராட வேண்டும் அல்லது குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தார்கள் என்றும் இனி எதிர்நோக்குவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் இது ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சனை என்பதற்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு samugammedia தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள் அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்க்கு எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம் இடம்பெறும் கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச் சட்டம் என்பது 1979 களில் கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால் அப்போது அது தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்றும் இதனால் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்றும், தற்போது கொண்டு வர இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானது என்றும், இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் இணைந்து போராட வேண்டும் அல்லது குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதே வேளை குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தார்கள் என்றும் இனி எதிர்நோக்குவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் இது ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சனை என்பதற்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement