• May 05 2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருப்பார்கள்! ஜே.வி.பி. samugammedia

Chithra / Apr 23rd 2023, 5:10 pm
image

Advertisement

மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குகின்ற சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விளங்குகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது மக்களின் பேச்சு சுதந்திரத்தை மறுதலிக்கின்ற மூர்க்கத்தனமான சட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த சட்டமானது கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற காவாலித்தனமான சட்டமாக காணப்படுகின்றது.

அதனால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.

இந்த சட்டமானது மக்களை முற்றாக செயலிழக்க செய்கின்றமையால் இந்த சட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருப்பார்கள் ஜே.வி.பி. samugammedia மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்குகின்ற சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விளங்குகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது மக்களின் பேச்சு சுதந்திரத்தை மறுதலிக்கின்ற மூர்க்கத்தனமான சட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த சட்டமானது கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற காவாலித்தனமான சட்டமாக காணப்படுகின்றது.அதனால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் மக்கள் வாய் இருந்தும் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.இந்த சட்டமானது மக்களை முற்றாக செயலிழக்க செய்கின்றமையால் இந்த சட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement