• May 18 2024

நான்கு மாதக் குழந்தையை சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரால் குழப்பம்! samugammedia

Chithra / Jul 12th 2023, 6:31 am
image

Advertisement

ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய, உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலையத் தளபதி எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் வீட்டிற்கு சென்று குழந்தையை பொலிஸாரிடம் அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

பத்து வயது குழந்தையை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிரமான போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதக் குழந்தையை சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரால் குழப்பம் samugammedia ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த முறைப்பாட்டிற்கமைய, உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலையத் தளபதி எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் வீட்டிற்கு சென்று குழந்தையை பொலிஸாரிடம் அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.பத்து வயது குழந்தையை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிரமான போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement