• May 18 2024

தமிழ் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை அவசியம்! - விக்கி லியுறுத்து!

Chithra / Jan 10th 2023, 11:15 am
image

Advertisement

ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் பேச்சுவார்தையில் ஈடுபடும் போது கருத்தொற்றுமை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கொழும்பில் சம்மந்தன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறுகின்றது. அதில் செல்வம், சித்தார்த்தன் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

நாம் அரசாங்கத்தோடு பேசும் விடயங்களில், என்ன பேச போகின்றோம் என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கருத்தொருமித்தல் ஒன்றை இன்று எட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைவரும் இப்பொழுது காலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று ஒரு சந்திப்பு 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியும் அதில் பங்கேற்கவுள்ளார்.

எவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பேசுவார் என்பது பற்றி  ஓரளவுக்கு சுரையனுக்கு தெரிந்துள்ளது.

அது பற்றி அவர் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

அதை விட நாளை மறுதினமும் அவர் பேசுவதாக தான் நானும் கேள்விப்பட்டுள்ளேன். எங்களுடன் முதல், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக சொல்லவில்லை.

இரண்டு நாள் பேச்சுக்கள் இன்றும் நாளையும் நடக்க கூடும். அதற்கு பின்னர் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் நிக்கநாயக்காவுடன் தொடர்பு கொண்ட போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கூட்டம் தொடர்பாக  உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

நான் நினைக்கின்றேன் அதற்கு காரணம் மோடியினுடைய கூட்டம் ஒன்றிற்கு அவர் போவதாக இருந்தது,

முக்கியமாக இதில் நாம் கூடி பேசியது என்னவென்றால், அரசாங்கத்தோடு பேசும் போது

என்ன விதமான ஒரு கருத்தொருமித்தல் எமக்கிடையில் வர வேண்டும்,   என்பது தான் எமது முக்கியமான கருத்து பரிமாற்றம்.

தமிழ் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை அவசியம் - விக்கி லியுறுத்து ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் பேச்சுவார்தையில் ஈடுபடும் போது கருத்தொற்றுமை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.கொழும்பில் சம்மந்தன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறுகின்றது. அதில் செல்வம், சித்தார்த்தன் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.நாம் அரசாங்கத்தோடு பேசும் விடயங்களில், என்ன பேச போகின்றோம் என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கருத்தொருமித்தல் ஒன்றை இன்று எட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அனைவரும் இப்பொழுது காலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர்.இன்று ஒரு சந்திப்பு 5 மணியளவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியும் அதில் பங்கேற்கவுள்ளார்.எவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பேசுவார் என்பது பற்றி  ஓரளவுக்கு சுரையனுக்கு தெரிந்துள்ளது.அது பற்றி அவர் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.அதை விட நாளை மறுதினமும் அவர் பேசுவதாக தான் நானும் கேள்விப்பட்டுள்ளேன். எங்களுடன் முதல், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக சொல்லவில்லை.இரண்டு நாள் பேச்சுக்கள் இன்றும் நாளையும் நடக்க கூடும். அதற்கு பின்னர் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.ஜனாதிபதியின் செயலாளர் சமன் நிக்கநாயக்காவுடன் தொடர்பு கொண்ட போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கூட்டம் தொடர்பாக  உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.நான் நினைக்கின்றேன் அதற்கு காரணம் மோடியினுடைய கூட்டம் ஒன்றிற்கு அவர் போவதாக இருந்தது,முக்கியமாக இதில் நாம் கூடி பேசியது என்னவென்றால், அரசாங்கத்தோடு பேசும் போதுஎன்ன விதமான ஒரு கருத்தொருமித்தல் எமக்கிடையில் வர வேண்டும்,   என்பது தான் எமது முக்கியமான கருத்து பரிமாற்றம்.

Advertisement

Advertisement

Advertisement