• Apr 24 2025

சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் - மூவர் கைது

Thansita / Apr 23rd 2025, 6:55 pm
image

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில்   

மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

நேற்று இரவு, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விருந்தின் போதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார் 

அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடும் மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூடும் காணப்படுதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

சுட்டுக் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் - மூவர் கைது சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில்   மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நேற்று இரவு, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விருந்தின் போதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார் அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடும் மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூடும் காணப்படுதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement