• May 18 2024

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள ஆபத்து! சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 13th 2023, 6:51 am
image

Advertisement

புத்தாண்டு காலத்தில், பற் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

சிறார்களும், முதியவர்களும், இந்தக் காலப்பகுதில் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்வதால், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பற் சிகிச்சை நிபுணர் அசேல விஜேசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.


இல்லையெனில் பற் சிதைவு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் அதிகளவில், பற் சிதைவு பிரச்சினை உள்ளது. குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே, பற்சிதைவு நிலையானது வேகமாக இடம்பெறுகின்றது.

புத்தாண்டு காலத்தில், மக்கள் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்கின்றனர். இனிப்புப் பண்டங்கள், அதிக நேரம் வாயில் இருந்தால் அதன் ஊடாக பற்றீரியாக்கள் உருவாகி பற்சிதைவு பிரச்சினை ஏற்படும்.


அதனால், பண்டிகைக் காலத்தில் சிறு பிள்ளைகள் உட்பட அனைவரும் இனிப்புப் பண்டங்களை உண்ட பின்னர், உடனடியாக பற்களைத் துலக்க வேண்டும்.

குறிப்பாக, பிரதான உணவு வேளைகளின் பின்னர், இனிப்புப் பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், பற்களைத் துலக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.


எனவே, ஏனைய சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு, இனிப்புப் பண்டங்களுக்குப் பதிலாக பழங்களை வழங்குவது தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பற் சிகிச்சை நிபுணர், அசேல விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புத்தாண்டு காலத்தில் ஏற்படவுள்ள ஆபத்து சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia புத்தாண்டு காலத்தில், பற் சுகாதாரம் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.சிறார்களும், முதியவர்களும், இந்தக் காலப்பகுதில் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்வதால், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பற் சிகிச்சை நிபுணர் அசேல விஜேசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.இல்லையெனில் பற் சிதைவு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.இலங்கையில் அதிகளவில், பற் சிதைவு பிரச்சினை உள்ளது. குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே, பற்சிதைவு நிலையானது வேகமாக இடம்பெறுகின்றது.புத்தாண்டு காலத்தில், மக்கள் இனிப்புப் பண்டங்களை அதிகளவில் உட்கொள்கின்றனர். இனிப்புப் பண்டங்கள், அதிக நேரம் வாயில் இருந்தால் அதன் ஊடாக பற்றீரியாக்கள் உருவாகி பற்சிதைவு பிரச்சினை ஏற்படும்.அதனால், பண்டிகைக் காலத்தில் சிறு பிள்ளைகள் உட்பட அனைவரும் இனிப்புப் பண்டங்களை உண்ட பின்னர், உடனடியாக பற்களைத் துலக்க வேண்டும்.குறிப்பாக, பிரதான உணவு வேளைகளின் பின்னர், இனிப்புப் பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.அதன் பின்னர், பற்களைத் துலக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.எனவே, ஏனைய சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு, இனிப்புப் பண்டங்களுக்குப் பதிலாக பழங்களை வழங்குவது தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பற் சிகிச்சை நிபுணர், அசேல விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement