• May 18 2024

இலங்கையில் காணப்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! samugammedia

Chithra / Jun 17th 2023, 8:15 am
image

Advertisement

சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது புலப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில், இலங்கையில் காணப்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பிலும், அந்தப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரம் என்பவற்றை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 


அத்துடன், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் காணப்படாத பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான அளவுகோல்கள் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் (National Education Commission) தயாரிக்கப்பட்டு வருவதாக இதன்போது புலப்பட்டது.

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி ஆலோசனை சேவையில் (In service Advisors) காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆங்கில மொழி மூலமான உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. அதற்கமைய, மாணவர்களின் தொடர் கல்விக்கு இடையூறாக உள்ள இந்த ஆசிரியர் பற்றாக்குறையை போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவரினால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இலங்கையில் காணப்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் samugammedia சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பில் செயற்படுவதற்கும் அவை தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டது.இது தொடர்பில் தற்பொழுது காணப்படும் சட்டக் கட்டமைப்புகள் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது புலப்பட்டது.கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், இலங்கையில் காணப்படும் சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பிலும், அந்தப் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரம் என்பவற்றை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.மேலும், சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் காணப்படாத பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான அளவுகோல்கள் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் (National Education Commission) தயாரிக்கப்பட்டு வருவதாக இதன்போது புலப்பட்டது.ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி ஆலோசனை சேவையில் (In service Advisors) காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.அத்துடன், அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆங்கில மொழி மூலமான உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. அதற்கமைய, மாணவர்களின் தொடர் கல்விக்கு இடையூறாக உள்ள இந்த ஆசிரியர் பற்றாக்குறையை போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவரினால் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement