• Nov 19 2024

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை நிறுத்த வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!samugammedia

Tharun / Feb 29th 2024, 6:38 pm
image

பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

பல்வேறு விவேகமற்ற முடிவுகளால் பல்கலைக்கழக அமைப்பு நெருக்கடியில் உள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கும் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல விரிவுரையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக அமைப்பிற்கு 12,000 ஆசிரியர்கள் தேவை. ஆனால் சுமார் 5500 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாக திரு.ரணவக்க குறிப்பிடுகிறார். ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார். 

அங்கு, பல்கலைக்கழக வைத்தியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன, இந்த சந்திப்பை அரசியல் விவாதங்களில் ஒரு முன்னேற்றமாக கூறலாம் என தெரிவித்தார்.

அத்துடன் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகள் அங்கு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்களும் அங்கு பெறப்பட்டதாக  ஜெயவர்தன கூறியுள்ளார். இந்த மாநாட்டில் நாட்டிற்கான ஒற்றுமையான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியர்கள் சங்க சம்மேளனம் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் கலாநிதி அஜித் அமரசிங்க, பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர, பொலிட்பீரோ தலைவர் கரு பரணவிதான, சர்வதேச விவகார பிரதி செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹண மஹலியநாராச்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை நிறுத்த வேண்டும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு.samugammedia பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்வேறு விவேகமற்ற முடிவுகளால் பல்கலைக்கழக அமைப்பு நெருக்கடியில் உள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கும் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல விரிவுரையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக அமைப்பிற்கு 12,000 ஆசிரியர்கள் தேவை. ஆனால் சுமார் 5500 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாக திரு.ரணவக்க குறிப்பிடுகிறார். ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார். அங்கு, பல்கலைக்கழக வைத்தியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன, இந்த சந்திப்பை அரசியல் விவாதங்களில் ஒரு முன்னேற்றமாக கூறலாம் என தெரிவித்தார்.அத்துடன் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகள் அங்கு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்களும் அங்கு பெறப்பட்டதாக  ஜெயவர்தன கூறியுள்ளார். இந்த மாநாட்டில் நாட்டிற்கான ஒற்றுமையான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வைத்தியர்கள் சங்க சம்மேளனம் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் கலாநிதி அஜித் அமரசிங்க, பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர, பொலிட்பீரோ தலைவர் கரு பரணவிதான, சர்வதேச விவகார பிரதி செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹண மஹலியநாராச்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement