• May 05 2024

யாழ் மாநகரசபை பாதீடு தோற்கடிப்பு: காலம் விரைவில் பதிலளிக்கும்- மணிவண்ணன் கருத்து!

Sharmi / Dec 21st 2022, 5:52 pm
image

Advertisement

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்துகொள்ளுவார்கள். என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி  வி.மணிவண்ணன்  தெரிவித்தார்.

2023ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடித்த பின்னரான ஊடக சந்திப்பு  இன்று  மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் எந்தொரு கட்சியும் எதிர்ப்பதாக இருந்தால் ஏதாவது  காரணத்தை சொல்லவேண்டும். வரவு செலவுத் திட்டத் தொடரிலே முதல்வர் தன்னிச்சையாக  சட்டம் ஊடாக செயற்படுகின்றார் என கூறுவது விடயம் கிடையாது.

அரசியல் ரீதியாக நேற்றையதினம் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கட்சித்தலைப்பீடம்  எதிராக வாக்களிப்பது என்று முடிவு எடுத்துவிட்டனர். இன்று சம்பிரதாய பூர்வமாக சபைக்கு வந்து தமது எதிர்ப்பினை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2021ஆம் ஆண்டு நான் மாநகர முதல்வராக பதவி வகித்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் 2022 ஆம் ஆண்டு நடுநிலை வகித்தனர். காரணம் உடனடி தோற்கடிப்பு செய்யப்பட்டால் சபை கலைந்துவிடும் என்ற ரீதியாக நடுநிலைவகித்தனர்.

நான் பதவியேற்று தன்னிச்சையாக செயற்பட்டேன் என்று இல்லை. போனமுறையும் தமிழ்தேசியகூட்டமைப்பு எதிராகத்தான் வாக்களித்தது.

அரசியல் கட்சிகள் தங்களுடைய விருப்புவெறுப்பு அப்பால் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தாங்களுடைய அரசியல் நலனுக்காக தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுவார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் நலன் என கருதி எதிர்காலத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம் என எண்ணி  இந்த வரவுசெலவினை தோற்கடித்தனர்.

என்னை முதல்வர் பதவியில் அகற்றமுடியும் என எண்ணியிருக்கலாம். இது தாங்களின் வளர்ச்சிக்காவும், அழிந்து செல்லுவதற்காவும் இருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

யாழ் மாநகரசபை பாதீடு தோற்கடிப்பு: காலம் விரைவில் பதிலளிக்கும்- மணிவண்ணன் கருத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்துகொள்ளுவார்கள். என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி  வி.மணிவண்ணன்  தெரிவித்தார்.2023ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடித்த பின்னரான ஊடக சந்திப்பு  இன்று  மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் எந்தொரு கட்சியும் எதிர்ப்பதாக இருந்தால் ஏதாவது  காரணத்தை சொல்லவேண்டும். வரவு செலவுத் திட்டத் தொடரிலே முதல்வர் தன்னிச்சையாக  சட்டம் ஊடாக செயற்படுகின்றார் என கூறுவது விடயம் கிடையாது.அரசியல் ரீதியாக நேற்றையதினம் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கட்சித்தலைப்பீடம்  எதிராக வாக்களிப்பது என்று முடிவு எடுத்துவிட்டனர். இன்று சம்பிரதாய பூர்வமாக சபைக்கு வந்து தமது எதிர்ப்பினை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.2021ஆம் ஆண்டு நான் மாநகர முதல்வராக பதவி வகித்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் 2022 ஆம் ஆண்டு நடுநிலை வகித்தனர். காரணம் உடனடி தோற்கடிப்பு செய்யப்பட்டால் சபை கலைந்துவிடும் என்ற ரீதியாக நடுநிலைவகித்தனர்.நான் பதவியேற்று தன்னிச்சையாக செயற்பட்டேன் என்று இல்லை. போனமுறையும் தமிழ்தேசியகூட்டமைப்பு எதிராகத்தான் வாக்களித்தது.அரசியல் கட்சிகள் தங்களுடைய விருப்புவெறுப்பு அப்பால் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தாங்களுடைய அரசியல் நலனுக்காக தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுவார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் நலன் என கருதி எதிர்காலத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம் என எண்ணி  இந்த வரவுசெலவினை தோற்கடித்தனர்.என்னை முதல்வர் பதவியில் அகற்றமுடியும் என எண்ணியிருக்கலாம். இது தாங்களின் வளர்ச்சிக்காவும், அழிந்து செல்லுவதற்காவும் இருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement