• Feb 11 2025

திருமலையில் நில மீட்பு தொடர்பில் கலந்துரையாடல்..!

Sharmi / Feb 10th 2025, 11:21 am
image

நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்றையதினம்(10) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்  பிரதிநிதிகள்,  ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடல் அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) நிறுவனங்கள் இணைந்து நிலமீட்புக்கான செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொண்டிருந்தது.

இக்கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாகவும், அபகரிப்புக்களை தடுப்பதற்காகம் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்கான சட்ட முன்னெடுப்புக்களை ஏற்படுத்தி நிலங்களை மீளப்பெற்று கொள்வதற்காக வலையமைப்பாக இணைந்து செயற்படுவதற்கான ஓர் கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில உரிமை மீறல்தொடர்பாக பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு தீர்வு காணும் செயற்றிட்டங்களையும் இன்போது உருவாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.




திருமலையில் நில மீட்பு தொடர்பில் கலந்துரையாடல். நில மீட்புக்கான வலையமைப்பு கலந்துரையாடல் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்றையதினம்(10) இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்  பிரதிநிதிகள்,  ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இக் கலந்துரையாடல் அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) நிறுவனங்கள் இணைந்து நிலமீட்புக்கான செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொண்டிருந்தது.இக்கலந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பாகவும், அபகரிப்புக்களை தடுப்பதற்காகம் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்கான சட்ட முன்னெடுப்புக்களை ஏற்படுத்தி நிலங்களை மீளப்பெற்று கொள்வதற்காக வலையமைப்பாக இணைந்து செயற்படுவதற்கான ஓர் கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது.இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில உரிமை மீறல்தொடர்பாக பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு தீர்வு காணும் செயற்றிட்டங்களையும் இன்போது உருவாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement