• May 05 2024

துண்டிக்கப்பட்ட மனித உறுப்புகள் அடங்கிய சூட்கேஸ் - மலேசியாவில் மர்மம்!

Sharmi / Jan 20th 2023, 11:34 am
image

Advertisement

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் வடக்கு பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் சுங்கை பூலோவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவரால் இந்த அதிர்ச்சியூட்டும் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தமை வழிப்போக்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்தில் விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

சூட்கேஸில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்களை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணைத் தலைவர் ஷஃபாடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கை கொலை என்று வகைப்படுத்தியுள்ளோம் எனவும், உயிரிழந்துள்ள நபர் வெளிநாட்டவர் எனவும்,  பிரேத பரிசோதனையில் அந்த நபருக்கு கூரிய ஆயுதத்தால் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் ஒரு ஆண் மற்றும் வெளிநாட்டவர் என்றும் அவர் ஒரு முஸ்லிம் அல்லாதவர் என நம்பப்படுவதாகவும்  பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணைகள்  நடத்தப்படும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துண்டிக்கப்பட்ட மனித உறுப்புகள் அடங்கிய சூட்கேஸ் - மலேசியாவில் மர்மம் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் வடக்கு பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவில் சுங்கை பூலோவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவரால் இந்த அதிர்ச்சியூட்டும் சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தமை வழிப்போக்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடத்தில் விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.சூட்கேஸில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்களை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணைத் தலைவர் ஷஃபாடன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கை கொலை என்று வகைப்படுத்தியுள்ளோம் எனவும், உயிரிழந்துள்ள நபர் வெளிநாட்டவர் எனவும்,  பிரேத பரிசோதனையில் அந்த நபருக்கு கூரிய ஆயுதத்தால் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் ஒரு ஆண் மற்றும் வெளிநாட்டவர் என்றும் அவர் ஒரு முஸ்லிம் அல்லாதவர் என நம்பப்படுவதாகவும்  பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணைகள்  நடத்தப்படும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement