• Jan 11 2025

வாழ்வில் இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

Tamil nila / Oct 31st 2024, 7:14 am
image

தீபாவளி என்பது குழந்தைகள் மிகவும் விரும்பி கொண்டாடக்கூடிய பண்டிகை. தீபாவளி அன்று புதிய ஆடை உடுத்தி, பட்டாசு வெடித்து அந்த நாளினை சந்தோசமாக கொண்டாடுவார்கள்.  வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து பேசி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அந்த நாள் போவதே தெரியாது. தீபாவளி என்ற சொல்லுக்கு அர்த்தம் தீப ஒளி என்று பொருளாகும். 


பல்வேறு நாடுகளில் பல விதான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று இந்த தீபாவளி. தீபாவளியை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.


தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” என்று அர்த்தம். அதாவது விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம். ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா, அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும். இதை உணர்த்தும் வகையில் தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது.


கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அந்த நேரத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் சாகும் இந்த நாளை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வரமாக கேட்டான். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

தீபாவளியானது ஐப்பசி மாதத்தில் தான் வரும். இந்த வருடம் தீபாவளியானது அமாவாசை தினத்தில் வருகிறது. அமாவாசை அடுத்து கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.


தீபாவளி அன்று எண்ணெய் வைத்து குளிப்பதை புனித நீராடல் என்று சொல்கிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் அனைத்து இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புதிய ஆடைகளில் மஹாவிஷ்ணுவும் குடியிருப்பதாக கருதப்படுகின்றது.


தீபாவளி அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே எழும்புவார்கள். எண்ணெய் வைத்து குளித்த பிறகு வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு வைத்து மகிழ்வார்கள். குறிப்பாக தீபாவளி அன்று வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். ஏனென்றால் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக கருதப்படுகிறது.

பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு உண்டு. தீபாவ்ளி அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் வைத்து நீராடி, புதிய ஆடை அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவது தான் தீபாவளியின் பெருமை.


பிரிந்திருக்கின்ற பல குடும்பங்கள் தீபாவளித் திருநாளில் ஒன்று சேருவார்கள். வீட்டிலே ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர். இந்த தீபத்தினை மாணிக்க தீபம் என்று கூறுவார்கள். இதன் மூலம் நமக்கு ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக இருக்கிறது.


வாழ்வில் இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள் தீபாவளி என்பது குழந்தைகள் மிகவும் விரும்பி கொண்டாடக்கூடிய பண்டிகை. தீபாவளி அன்று புதிய ஆடை உடுத்தி, பட்டாசு வெடித்து அந்த நாளினை சந்தோசமாக கொண்டாடுவார்கள்.  வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து பேசி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அந்த நாள் போவதே தெரியாது. தீபாவளி என்ற சொல்லுக்கு அர்த்தம் தீப ஒளி என்று பொருளாகும். பல்வேறு நாடுகளில் பல விதான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று இந்த தீபாவளி. தீபாவளியை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” என்று அர்த்தம். அதாவது விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம். ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா, அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும். இதை உணர்த்தும் வகையில் தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது.கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அந்த நேரத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் சாகும் இந்த நாளை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வரமாக கேட்டான். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.தீபாவளியானது ஐப்பசி மாதத்தில் தான் வரும். இந்த வருடம் தீபாவளியானது அமாவாசை தினத்தில் வருகிறது. அமாவாசை அடுத்து கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.தீபாவளி அன்று எண்ணெய் வைத்து குளிப்பதை புனித நீராடல் என்று சொல்கிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் அனைத்து இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புதிய ஆடைகளில் மஹாவிஷ்ணுவும் குடியிருப்பதாக கருதப்படுகின்றது.தீபாவளி அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே எழும்புவார்கள். எண்ணெய் வைத்து குளித்த பிறகு வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு வைத்து மகிழ்வார்கள். குறிப்பாக தீபாவளி அன்று வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். ஏனென்றால் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக கருதப்படுகிறது.பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு உண்டு. தீபாவ்ளி அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் வைத்து நீராடி, புதிய ஆடை அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவது தான் தீபாவளியின் பெருமை.பிரிந்திருக்கின்ற பல குடும்பங்கள் தீபாவளித் திருநாளில் ஒன்று சேருவார்கள். வீட்டிலே ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர். இந்த தீபத்தினை மாணிக்க தீபம் என்று கூறுவார்கள். இதன் மூலம் நமக்கு ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement