திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக சாடியமைக்கு அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். எம்மை பிரபலமாகியுள்ளனர்.
பேரணி தொடர்பில் பிரச்சாரம் செய்த அரசாங்கத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
அரசாங்கத்துக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன, அந்த காலப்பகுதியில் அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நடைபவணியில் ஈடுபட உள்ளோம்.
அரசாங்கமளித்த வாக்குறுதிகளை மீள நினைவூட்டுவதில் உள்ள தவறு என்ன? அடக்குமுறையையும், ஊழலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது தவறா? அரசாங்கத்தை வழிப்படுத்தவே எதிர்பார்த்துள்ளோம், மாறாக அரசாங்கத்தை வீழ்த்துவது எமது என்னம்மல்ல.
திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு என்னம் எம்மிடமில்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம்.
இறுப்பினும் அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது. அடக்குமுறையாளர்கள், ஊழல் வாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பொய்காரர்களைக் கொண்டதாக இருக்குமாயின் அதை மக்களுக்கு தெரியப்படுத்த நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றார்.
திசைக்காட்டியுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்; நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் – எச்சரிக்கும் கம்மன்பில திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக சாடியமைக்கு அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். எம்மை பிரபலமாகியுள்ளனர். பேரணி தொடர்பில் பிரச்சாரம் செய்த அரசாங்கத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.அரசாங்கத்துக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன, அந்த காலப்பகுதியில் அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நடைபவணியில் ஈடுபட உள்ளோம். அரசாங்கமளித்த வாக்குறுதிகளை மீள நினைவூட்டுவதில் உள்ள தவறு என்ன அடக்குமுறையையும், ஊழலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது தவறா அரசாங்கத்தை வழிப்படுத்தவே எதிர்பார்த்துள்ளோம், மாறாக அரசாங்கத்தை வீழ்த்துவது எமது என்னம்மல்ல. திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு என்னம் எம்மிடமில்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம். இறுப்பினும் அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது. அடக்குமுறையாளர்கள், ஊழல் வாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பொய்காரர்களைக் கொண்டதாக இருக்குமாயின் அதை மக்களுக்கு தெரியப்படுத்த நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்றார்.