ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு, தனியார் துறை முதலீடுகள் தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் குழுவிடம் அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.
அரசாங்கம் வேறு மாற்று வழிகளைக் கண்டறிய செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்கம் ஒரு புதிய இயக்குநர்கள் குழுவை நியமித்துள்ளது.
அதை எவ்வாறு திறமையாக நிர்வகிக்க முடியும் என்பதை ஆய்வு செய்யுமாறு புதிய குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு தனியார் துறை முதலீடுகள் தேவையா ஆய்வு செய்ய பணிப்புரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு, தனியார் துறை முதலீடுகள் தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் குழுவிடம் அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார். நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.அரசாங்கம் வேறு மாற்று வழிகளைக் கண்டறிய செயற்பட்டு வருவதாகவும் கூறினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்கம் ஒரு புதிய இயக்குநர்கள் குழுவை நியமித்துள்ளது.அதை எவ்வாறு திறமையாக நிர்வகிக்க முடியும் என்பதை ஆய்வு செய்யுமாறு புதிய குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.