• Mar 16 2025

இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் விசா; இத்தாலி அரசாங்கம் இணக்கம்

Chithra / Mar 15th 2025, 5:16 pm
image


இலங்கையர்களுக்கு மறுபடியும் தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். 

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இத்தாலி அரசாங்கம் விசா வழங்குவதை நிறுத்தியிருந்தது. இத்தாலிய விசா தடை இலங்கைக்குப் பிரச்சினையாகவே இருந்தது. 

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இத்தாலி அரசாங்கம் விசா தடையை நீக்கியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

அமைச்சர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

இப்போது இத்தாலிய அரசாங்கம் எங்களுக்கு விசா வசதிகளை வழங்குகிறது. தொழில் விசாக்களை வழங்கும்போது ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் தேவைப்படுகின்றன. 

நாம் வழங்கும் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் பல தொழிநுட்ப வேறுபாடுகள் காணப்படுவதாகக் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. 

சுமார் ஐந்து வகையான ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதால் இத்தாலி அரசாங்கத்தால் இவற்றை அடையாளம் காணுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே இந்த ஐந்தையும் ஒரே முறையில் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளோம். 

இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 13ஆம் திகதி அமைச்சரவைக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம். 

மேலும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் விசா; இத்தாலி அரசாங்கம் இணக்கம் இலங்கையர்களுக்கு மறுபடியும் தொழில் விசாக்களை வழங்குவதற்கு இத்தாலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இத்தாலி அரசாங்கம் விசா வழங்குவதை நிறுத்தியிருந்தது. இத்தாலிய விசா தடை இலங்கைக்குப் பிரச்சினையாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இத்தாலி அரசாங்கம் விசா தடையை நீக்கியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இப்போது இத்தாலிய அரசாங்கம் எங்களுக்கு விசா வசதிகளை வழங்குகிறது. தொழில் விசாக்களை வழங்கும்போது ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் தேவைப்படுகின்றன. நாம் வழங்கும் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் பல தொழிநுட்ப வேறுபாடுகள் காணப்படுவதாகக் கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. சுமார் ஐந்து வகையான ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் காணப்படுவதால் இத்தாலி அரசாங்கத்தால் இவற்றை அடையாளம் காணுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்த ஐந்தையும் ஒரே முறையில் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 13ஆம் திகதி அமைச்சரவைக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம். மேலும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement