• Nov 24 2024

இந்திய இழுவை மடியின் பாதிப்பால் தாலியை கூட மீள முடியவில்லை - மீனவ சங்கப் பெண் தெரிவிப்பு!

Tamil nila / Jul 11th 2024, 9:27 pm
image

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடித் தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார்.

இன்றைய தினம் வியாழக்கிழமை மாதகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்தியாவின் அத்துமீறிய இழுவமடித் தொழிலாளர்களினால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

எமது மீனவர்களின் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் தொடர்ச்சியாக அறக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு மீனவனுக்கும் பல கோடி ரூபாய் கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் வியாழக்கிழமை மாதகல் கடற்பரப்புக்குள் இந்தியாவின் அத்துமீறிய இழுவைமடி தொழிலாளர்கள் மூன்று படகுகளில் வருகை தந்த நிலையில் கடற்கரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எமது இருபதுக்கும் மேற்பட்ட மீனவர்களின் வேலைகள் அறத்து நாசம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான இழப்பீடு வழங்குவது யார்?

ஒவ்வொரு மீனவனின் குடும்பமும் இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் கோடி ரூபாக்களை இழந்த நிலையில் பலரின் நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளன. 

எனது பிள்ளைகளின் மீன்பிடி வலைகளும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் அறுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வேலைகளை வாங்குவதற்காக எனது தாலியை வங்கியில் அடகு வைத்தேன். 

மீண்டும் தொடர்ச்சியாக இந்தியா இழுவமாடி படகுகளின் அத்துமீறலால் எனது பிள்ளைகளின் வலைகளும் அறுக்கப்பட்டு தரும் நிலையில் எனது வங்கியில் அடகு வைக்கப்பட்ட தாலியை மீள முடியாமல் உள்ளது.

ஆகவே இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளை நமது கடற்பரப்புக்குள் நுழைய விடாமல் கடற் படையினர் அவர்களை தொடர்ச்சியாக கைது செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இந்திய இழுவை மடியின் பாதிப்பால் தாலியை கூட மீள முடியவில்லை - மீனவ சங்கப் பெண் தெரிவிப்பு மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடித் தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார்.இன்றைய தினம் வியாழக்கிழமை மாதகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் அத்துமீறிய இழுவமடித் தொழிலாளர்களினால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.எமது மீனவர்களின் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் தொடர்ச்சியாக அறக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு மீனவனுக்கும் பல கோடி ரூபாய் கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.இன்றையதினம் வியாழக்கிழமை மாதகல் கடற்பரப்புக்குள் இந்தியாவின் அத்துமீறிய இழுவைமடி தொழிலாளர்கள் மூன்று படகுகளில் வருகை தந்த நிலையில் கடற்கரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எமது இருபதுக்கும் மேற்பட்ட மீனவர்களின் வேலைகள் அறத்து நாசம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான இழப்பீடு வழங்குவது யார்ஒவ்வொரு மீனவனின் குடும்பமும் இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் கோடி ரூபாக்களை இழந்த நிலையில் பலரின் நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனது பிள்ளைகளின் மீன்பிடி வலைகளும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் அறுக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வேலைகளை வாங்குவதற்காக எனது தாலியை வங்கியில் அடகு வைத்தேன். மீண்டும் தொடர்ச்சியாக இந்தியா இழுவமாடி படகுகளின் அத்துமீறலால் எனது பிள்ளைகளின் வலைகளும் அறுக்கப்பட்டு தரும் நிலையில் எனது வங்கியில் அடகு வைக்கப்பட்ட தாலியை மீள முடியாமல் உள்ளது.ஆகவே இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளை நமது கடற்பரப்புக்குள் நுழைய விடாமல் கடற் படையினர் அவர்களை தொடர்ச்சியாக கைது செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement