• May 11 2024

மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ – வகுப்பறைகள் சேதம்! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 8:42 am
image

Advertisement

மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தீயில் சேதமடைந்தது. ஜொகூரின் பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டத்தில் உள்ள பாரிட் ராஜா (Parit Raja) நகரில் அச்சம்பவம் நேர்ந்தது.

SMK Tun Ismail உயர்நிலைப் பள்ளியின் 2 வகுப்பறைகளும் தலைமையாசிரியர் அலுவலகமும் சேதமடைந்ததாக ஆயர் ஹித்தாம் (Ayer Hitam) தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.சம்பவம் (31 மே) இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் நேர்ந்தது.

16 தீயணைப்பாளர்களும் 2 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக The Star தெரிவித்தது.தீயில் பள்ளியின் இரண்டாம் மாடி பாதிக்கப்பட்டது.

இரவு 10:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.அது ஏற்படுத்திய சேதத்தை மதிப்பிடுவதோடு தீ மூண்டதற்கான காரணத்தையும் ஆராய்வதாகத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

 

மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ – வகுப்பறைகள் சேதம் samugammedia மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தீயில் சேதமடைந்தது. ஜொகூரின் பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டத்தில் உள்ள பாரிட் ராஜா (Parit Raja) நகரில் அச்சம்பவம் நேர்ந்தது.SMK Tun Ismail உயர்நிலைப் பள்ளியின் 2 வகுப்பறைகளும் தலைமையாசிரியர் அலுவலகமும் சேதமடைந்ததாக ஆயர் ஹித்தாம் (Ayer Hitam) தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.சம்பவம் (31 மே) இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் நேர்ந்தது.16 தீயணைப்பாளர்களும் 2 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக The Star தெரிவித்தது.தீயில் பள்ளியின் இரண்டாம் மாடி பாதிக்கப்பட்டது.இரவு 10:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.அது ஏற்படுத்திய சேதத்தை மதிப்பிடுவதோடு தீ மூண்டதற்கான காரணத்தையும் ஆராய்வதாகத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. 

Advertisement

Advertisement

Advertisement