• Nov 10 2024

சூரிய மின்னிணைப்பில் மோசடி - ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை...!

Anaath / Jul 14th 2024, 12:07 pm
image

யாழில்  சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,   சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை  தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச் சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும், யாழில் இயங்கும்  பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது முறைகேடான விதத்தில்அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப் பட்டுள்ளன என்றும், இவை குறித்து மின்சாரசபை யின் பொது முகாமையா ளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கை யாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த விடயம் தொடர் பில் சுயாதீன விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிப தியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வைடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சூரிய மின்னிணைப்பில் மோசடி - ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை. யாழில்  சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,   சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை  தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு வலுசக்தி அமைச் சுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுமேலும், யாழில் இயங்கும்  பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது முறைகேடான விதத்தில்அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப் பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப் பட்டுள்ளன என்றும், இவை குறித்து மின்சாரசபை யின் பொது முகாமையா ளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கை யாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்தே குறித்த விடயம் தொடர் பில் சுயாதீன விசாரணைகளை மேற் கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிப தியின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் வைடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement