• Jan 07 2025

சிவனொலிபாதமலை யாத்திரியர்களுக்கு இலவசமாக : சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Tharmini / Dec 23rd 2024, 12:54 pm
image

சிவனொலிபாத மலை பருவ காலத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் யாத்திரியர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான திலிப் ஜயவர்தன மற்றும் சிவனொலிபாத மலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக சிவனொலிபாத மலைக்கு தரிசனம் செய்யவரும் அனைத்து பக்தர்களுக்கும் சுத்தமான குடிநீரை பணம் இன்றி பெற்றுக் கொள்ளவும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து விடுபடவும் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கடந்த பௌர்ணமி நாளில் கையளிக்கப்பட்டது. 

இந்த வேலை திட்டத்தை தர்ம்ம சுகந்த மனுசத் பதனம என்ற நிறுவனத்தின் தலைவர் சுஜித் விக்கிரம ரத்ன அவர்கள் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் நலன் கருதி மிகவும் அர்ப்பணிப்புடன் ஆரம்பித்து வைத்தார். 

இந்த வேலை திட்டம் சிவனொலிபாத மலை அடி வாரமான சியத கங்குல பகுதியில் இருந்து மலை உச்சி வரை குடிநீரை பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சிவனொலிபாத மலை  எதிர்வரும் காலங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் தடுக்க முடியும் எனவும் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கொட்டும் மழையில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.




சிவனொலிபாதமலை யாத்திரியர்களுக்கு இலவசமாக : சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம் சிவனொலிபாத மலை பருவ காலத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் யாத்திரியர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான திலிப் ஜயவர்தன மற்றும் சிவனொலிபாத மலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பல ஆண்டுகளாக சிவனொலிபாத மலைக்கு தரிசனம் செய்யவரும் அனைத்து பக்தர்களுக்கும் சுத்தமான குடிநீரை பணம் இன்றி பெற்றுக் கொள்ளவும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து விடுபடவும் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கடந்த பௌர்ணமி நாளில் கையளிக்கப்பட்டது. இந்த வேலை திட்டத்தை தர்ம்ம சுகந்த மனுசத் பதனம என்ற நிறுவனத்தின் தலைவர் சுஜித் விக்கிரம ரத்ன அவர்கள் சிவனடி பாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் நலன் கருதி மிகவும் அர்ப்பணிப்புடன் ஆரம்பித்து வைத்தார். இந்த வேலை திட்டம் சிவனொலிபாத மலை அடி வாரமான சியத கங்குல பகுதியில் இருந்து மலை உச்சி வரை குடிநீரை பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவனொலிபாத மலை  எதிர்வரும் காலங்களில் பிளாஸ்டிக் போத்தல்கள் தடுக்க முடியும் எனவும் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியும் என சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொட்டும் மழையில் இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement