• Jun 17 2024

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள் இலவச விநியோகம்! samugammedia

Tamil nila / Aug 15th 2023, 5:47 pm
image

Advertisement

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக "மாணாக்க உழவர்" என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தற்போது இலவசமாக விதைப்பொதிகளை வழங்கி வருகின்றது.

இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் யாழ்ப்பாணம், அரசடிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையும், விதைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இம் மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் தினமும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோர் சகிதம் வந்து மாணவர்கள் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுத்தோட்டப் போட்டிக்கான விதைகள் இலவச விநியோகம் samugammedia தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக "மாணாக்க உழவர்" என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப்பற்றாக்குறை, நஞ்சற்ற உணவுற்பத்தி, மாணவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவித்தல் ஆகியவனவற்றை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தற்போது இலவசமாக விதைப்பொதிகளை வழங்கி வருகின்றது.இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் யாழ்ப்பாணம், அரசடிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தையும், விதைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.இம் மாதம் 16, 17, 18 ஆகிய திகதிகளில் தினமும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோர் சகிதம் வந்து மாணவர்கள் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும் சிறப்பாக வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்பவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement