• May 04 2024

மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! samugammedia

Chithra / Oct 6th 2023, 7:55 am
image

Advertisement

 

உலகின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு இறுதி வரை தங்கள் உற்பத்தி குறைப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட வரத்து மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக எண்ணெய் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒபெக் பிளஸ் அமைப்பின் இரண்டு முக்கிய நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் அமைச்சர்கள் ஆன்லைன் கூட்டத்தில் இணையவுள்ள நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

சவூதி அரேபியா ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் குறைப்பை தொடர்ந்து செயல்படுத்துவதாக அறிவித்தது, மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு நாளைக்கு 09 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதி வரை இந்த நிலை அமுலில் இருக்கும் என்றும் ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியுள்ளார். 

ரஷ்யா ளொன்றுக்கு 03 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி குறைப்பை நடைமுறைப்படுத்துகிறது.


மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை. samugammedia  உலகின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு இறுதி வரை தங்கள் உற்பத்தி குறைப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.மட்டுப்படுத்தப்பட்ட வரத்து மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக எண்ணெய் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஒபெக் பிளஸ் அமைப்பின் இரண்டு முக்கிய நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் அமைச்சர்கள் ஆன்லைன் கூட்டத்தில் இணையவுள்ள நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.சவூதி அரேபியா ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் குறைப்பை தொடர்ந்து செயல்படுத்துவதாக அறிவித்தது, மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு நாளைக்கு 09 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யா ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் என்றும், இந்த ஆண்டு இறுதி வரை இந்த நிலை அமுலில் இருக்கும் என்றும் ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறியுள்ளார். ரஷ்யா ளொன்றுக்கு 03 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி குறைப்பை நடைமுறைப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

Advertisement