உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் கலந்துரையாடி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியப் பேரவை உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களான த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.
அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
அத்துடன், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள - பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் நடவடிக்கை. உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் கலந்துரையாடி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் தேசியப் பேரவை உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களான த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.அத்துடன், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள - பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.