• Nov 28 2024

நாளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை..!!

Tamil nila / May 5th 2024, 9:11 pm
image

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகிறது.

452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் மூன்று இலட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



நாளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகிறது.452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதில் மூன்று இலட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement