• May 10 2024

குடிநீர் கட்டணம் செலுத்தாத கோட்டாபய..! வெளியான தகவல் samugammedia

Chithra / Apr 23rd 2023, 4:07 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.

ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், கடந்த மாதத்திற்கான கட்டணமான 46,000 ரூபாவில், முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்தாத நிலுவைத் தொகையும் அடங்கும்.

எனவே, இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்த கூடுதல் அறிவுறுத்தல்களைக் கோரியுள்ளது. எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்குச் செலுத்த வேண்டிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் கோட்டாபய செலுத்தவேண்டிய 46,000 ரூபாய் அதிகம் இல்லை.

எனினும் ஏனையோர், முன்னர் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடித்த கொள்கையையே நாட்டை சீரழித்த கோட்டாபயவும் கடைப்பிடிக்கும் வகையில் இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.

குடிநீர் கட்டணம் செலுத்தாத கோட்டாபய. வெளியான தகவல் samugammedia முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், கடந்த மாதத்திற்கான கட்டணமான 46,000 ரூபாவில், முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்தாத நிலுவைத் தொகையும் அடங்கும்.எனவே, இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்த கூடுதல் அறிவுறுத்தல்களைக் கோரியுள்ளது. எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்குச் செலுத்த வேண்டிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் கோட்டாபய செலுத்தவேண்டிய 46,000 ரூபாய் அதிகம் இல்லை.எனினும் ஏனையோர், முன்னர் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடித்த கொள்கையையே நாட்டை சீரழித்த கோட்டாபயவும் கடைப்பிடிக்கும் வகையில் இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement