• Jun 29 2024

பதவி விலகுகின்றார் - அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி – அழுத்தம் காரணமா..??samugammedia

Sharmi / May 28th 2023, 11:20 am
image

Advertisement

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதியினை வழங்காத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி கல்பனா லியனகே புதிய அறிவிப்பொன்றை விடுத்தள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஊடக அமைச்சுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் பணிபுரியுமாறு அமைச்சு அறிவித்தல் வழங்குமானால் அதற்கேற்ப பணியைத் தொடர்வதாகவும், மாறாக இடைநிறுத்தப்பட்டால், தானும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் திருமதி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகுகின்றார் - அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி – அழுத்தம் காரணமா.samugammedia உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதியினை வழங்காத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி கல்பனா லியனகே புதிய அறிவிப்பொன்றை விடுத்தள்ளார்.எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஊடக அமைச்சுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.எனினும் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தொடர்ந்தும் பணிபுரியுமாறு அமைச்சு அறிவித்தல் வழங்குமானால் அதற்கேற்ப பணியைத் தொடர்வதாகவும், மாறாக இடைநிறுத்தப்பட்டால், தானும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் திருமதி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement