• Jul 01 2024

வவுனியாவில் துணிகரம்...! வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு...!

Sharmi / Jun 29th 2024, 8:53 am
image

Advertisement

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் வவுனியா கோயில்குளம் பகுதியில் நேற்றையதினம் (28) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதன்போது ஒரு பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். 

எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் துணிகரம். வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு. வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவம் வவுனியா கோயில்குளம் பகுதியில் நேற்றையதினம் (28) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒரு பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அத்துடன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, சிதம்பரபுரம் பகுதியிலும் பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். எனவே பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாகவும், பின் தொடர்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement