• Dec 03 2024

யாழ் கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது!

Tamil nila / Jun 29th 2024, 6:17 am
image

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டனர்.

வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ் கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டனர்.வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement