• May 18 2024

யாழ். பல்கலை மாணவர் விடுதிகளுக்கு பெரும்பான்மையின மாணவர்கள் மூலம் போதைப்பொருள் விநியோகம்! - விசாரணைகளில் அம்பலம் samugammedia

Chithra / Apr 10th 2023, 7:06 pm
image

Advertisement

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் விடுதிகளை இலக்கு வைத்து பெரும்பான்மையின  மாணவர்களால்  போதைப் பொருள் விநியோகம்  செய்யும் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள தனியார்  தங்குமிட விடுதியில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார்  விடுதியை சோதனையிட்ட நிலையில்  போதைப்பொருள் பாவித்ததற்கான ஆதாரங்கள் விடுதியில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது  பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சென்று போதை பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு நான்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது.

எனினும் மாணவர்கள் ஒன்றாக விடுதிகளில் தங்கியுள்ள நிலையில்  போதை பொருள் பாவனையற்ற மாணவர்களும் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழகம் சார்ந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வருகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் திட்டமிட்ட முறையில் போதை பொருள் பாவனை ஊக்கப்படுத்தப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் போதை பொருட்களை பெற்று ஏனைய மாணவர்களுக்கும் விநியோகிப்பதாகவும் இதற்கு தமிழ் மாணவர்கள் சிலர் உடந்தையாகவும் உள்ள நிலையில் அதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவது கடினம் என கூறப்படுகிறது.

யாழ். பல்கலை மாணவர் விடுதிகளுக்கு பெரும்பான்மையின மாணவர்கள் மூலம் போதைப்பொருள் விநியோகம் - விசாரணைகளில் அம்பலம் samugammedia யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் விடுதிகளை இலக்கு வைத்து பெரும்பான்மையின  மாணவர்களால்  போதைப் பொருள் விநியோகம்  செய்யும் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள தனியார்  தங்குமிட விடுதியில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.இந்நிலையில் குறித்த விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார்  விடுதியை சோதனையிட்ட நிலையில்  போதைப்பொருள் பாவித்ததற்கான ஆதாரங்கள் விடுதியில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது  பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சென்று போதை பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு நான்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயல்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்தது.எனினும் மாணவர்கள் ஒன்றாக விடுதிகளில் தங்கியுள்ள நிலையில்  போதை பொருள் பாவனையற்ற மாணவர்களும் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழகம் சார்ந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வருகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் திட்டமிட்ட முறையில் போதை பொருள் பாவனை ஊக்கப்படுத்தப்படுகிறது.புலனாய்வுப் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் போதை பொருட்களை பெற்று ஏனைய மாணவர்களுக்கும் விநியோகிப்பதாகவும் இதற்கு தமிழ் மாணவர்கள் சிலர் உடந்தையாகவும் உள்ள நிலையில் அதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவது கடினம் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement