• Jul 03 2024

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை விவகாரம்; இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆலய நிர்வாகத்தினர் பேச்சு! samugammedia

Chithra / Apr 10th 2023, 7:02 pm
image

Advertisement

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் ஆலய நிர்வாகத்தினர் பேச்சு நடத்தியுள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10) மாலை குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.

இச் சந்திப்பில் இந்து மாமன்றத்தின் தலைவர், இந்து மாமன்றத்தின் பொருளாளர், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 8 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் நீக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் விகாரை நிறுவப்பட்ட விடயம் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தப்பட்டதுடன், எல்லையோரக் கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் சுட்டிக் காட்டியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன், வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிசார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இவை தொடர்பில் கவனம் செலுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இவை தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தமக்கு உறுதியளித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பௌத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் சந்தித்து வெடுக்குநாறி மலை ஆலய விடயம் தொடர்பில் பேசினார். 

இதன்போது, நீதிமன்ற வழக்கு முடியும் வரை இவ் விடயத்தில் தலையிட முடியாது என அமைச்சர் தெரிவித்தாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை விவகாரம்; இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆலய நிர்வாகத்தினர் பேச்சு samugammedia வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் ஆலய நிர்வாகத்தினர் பேச்சு நடத்தியுள்ளனர்.கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10) மாலை குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.இச் சந்திப்பில் இந்து மாமன்றத்தின் தலைவர், இந்து மாமன்றத்தின் பொருளாளர், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 8 பேர் கலந்து கொண்டனர்.இதன்போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் நீக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் விகாரை நிறுவப்பட்ட விடயம் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தப்பட்டதுடன், எல்லையோரக் கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் சுட்டிக் காட்டியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.அத்துடன், வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிசார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.இவை தொடர்பில் கவனம் செலுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இவை தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தமக்கு உறுதியளித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பௌத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவையும் சந்தித்து வெடுக்குநாறி மலை ஆலய விடயம் தொடர்பில் பேசினார். இதன்போது, நீதிமன்ற வழக்கு முடியும் வரை இவ் விடயத்தில் தலையிட முடியாது என அமைச்சர் தெரிவித்தாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement