• May 18 2024

யாழ். பல்கலைக்கழகத்தில் ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! SamugamMedia

Chithra / Mar 9th 2023, 1:33 pm
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்  இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன்  அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.


இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் மார்ச் 15ம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என்றனர்.


யாழ். பல்கலைக்கழகத்தில் ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் SamugamMedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்  இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன்  அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் மார்ச் 15ம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement