• May 06 2024

பொருளாதார நெருக்கடியில் சீர்குலைந்துள்ள சுகாதார கட்டமைப்பு ! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 10:28 pm
image

Advertisement

பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. 


பாகிஸ்தானின் அந்நியச் செலாவணியில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


இதுவே இந்த மருந்து தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால், பாகிஸ்தானில் உள்ள வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது நிலவும் டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு, கராச்சி துறைமுகத்தில் இருந்தும் மருந்துக்கு தேவையான சில மூலப்பொருட்களை வெளியிடுவதற்கு தேவையான டொலர்களை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

பொருளாதார நெருக்கடியில் சீர்குலைந்துள்ள சுகாதார கட்டமைப்பு SamugamMedia பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டின் சுகாதார அமைப்பு சீர்குலைந்து போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணியில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே இந்த மருந்து தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால், பாகிஸ்தானில் உள்ள வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது நிலவும் டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு, கராச்சி துறைமுகத்தில் இருந்தும் மருந்துக்கு தேவையான சில மூலப்பொருட்களை வெளியிடுவதற்கு தேவையான டொலர்களை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement