• Sep 08 2024

விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!தளபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

crownson / Dec 22nd 2022, 7:17 am
image

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய், தற்போது இயக்குநர் வம்ஷி  இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதற்கிடையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் அடுத்தப் படமான தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது.

மேலும் இதில் கமல்ஹாசன், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

இப்போது கோலிவுட்டின் பரபரப்பான செய்தி தளபதி 68 குறித்து தான்.

படத்தை யார் இயக்குவது மற்றும் தயாரிப்பது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய், அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த திட்டத்தை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு விஜய்யை இயக்க அட்லீ விரும்புகிறாராம்.

முதலில் ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் முறையே 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களில் ஏற்கனவே விஜய் மற்றும் அட்லியுடன் இணைந்து செயல்பட்டன.

இந்தப் படத்திற்கு அட்லீ ரூ.50 கோடி சம்பளம் பெறவிருக்கிறாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையை அவர் அடையவுள்ளாராம்.

விஜய் 150 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

இது அவரது கேரியரில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

நாயகன் மற்றும் இயக்குனருக்கு ஏற்கனவே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 68 படத்திற்காக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

விஜய்யின் தளபதி 67 மற்றும் அட்லியின் 'ஜவான்' படங்களை முடித்த பிறகு 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தெறி,மெர்சல், பிகில் ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அட்லீ இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்தளபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய், தற்போது இயக்குநர் வம்ஷி  இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.இதற்கிடையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் அடுத்தப் படமான தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது. மேலும் இதில் கமல்ஹாசன், சஞ்சய் தத் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.இப்போது கோலிவுட்டின் பரபரப்பான செய்தி தளபதி 68 குறித்து தான். படத்தை யார் இயக்குவது மற்றும் தயாரிப்பது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய், அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த திட்டத்தை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு விஜய்யை இயக்க அட்லீ விரும்புகிறாராம். முதலில் ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் முறையே 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய படங்களில் ஏற்கனவே விஜய் மற்றும் அட்லியுடன் இணைந்து செயல்பட்டன.இந்தப் படத்திற்கு அட்லீ ரூ.50 கோடி சம்பளம் பெறவிருக்கிறாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையை அவர் அடையவுள்ளாராம்.விஜய் 150 கோடி சம்பளம் பெறுகிறாராம். இது அவரது கேரியரில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது.நாயகன் மற்றும் இயக்குனருக்கு ஏற்கனவே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 68 படத்திற்காக இருநூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விஜய்யின் தளபதி 67 மற்றும் அட்லியின் 'ஜவான்' படங்களை முடித்த பிறகு 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தெறி,மெர்சல், பிகில் ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அட்லீ இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisement

Advertisement

Advertisement