• May 18 2024

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு தொடர்பில் வெளியான தகவல்

IMF
Chithra / Dec 22nd 2022, 7:17 am
image

Advertisement

இலங்கையின் அதிகாரிகள் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான முறையான குழு, இன்னும் நடைமுறையில் இல்லை என்று நிதி அமைச்சுக்கு நெருக்கமான தரப்புக்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.

2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கம், கடந்த செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டது.

எனினும், சர்வதேச நாணய நிதியின் நிர்வாகக் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி கிடைக்காது.

இதன் அடிப்படையில் இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெறும் நோக்குடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றபோதும், இன்னும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.

சீனாவே இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக உள்ளது. இலங்கைப் பெற்றுள்ள வெளிநாட்டு கடனில், இது 20 வீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு தொடர்பில் வெளியான தகவல் இலங்கையின் அதிகாரிகள் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான முறையான குழு, இன்னும் நடைமுறையில் இல்லை என்று நிதி அமைச்சுக்கு நெருக்கமான தரப்புக்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கம், கடந்த செப்டம்பரில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டது.எனினும், சர்வதேச நாணய நிதியின் நிர்வாகக் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி கிடைக்காது.இதன் அடிப்படையில் இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெறும் நோக்குடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றபோதும், இன்னும் தெளிவான முடிவுகள் கிடைக்கவில்லை.சீனாவே இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக உள்ளது. இலங்கைப் பெற்றுள்ள வெளிநாட்டு கடனில், இது 20 வீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement