• Apr 25 2024

ரணிலின் வருகையை சாதகமாக பரிசீலிக்கவேண்டும் - காணி பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்! - மாவை

Chithra / Jan 14th 2023, 7:42 pm
image

Advertisement

நாளைய தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ள நிலையில் 

அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தமக்கு அதில் பங்கேற்பதில் தடைகள் ஏற்படுமென தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வருகை மற்றும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுகின்ற விடயம் தொடர்பாக 

'சமூகம் மீடியா' மாவை சேனாதிராஜாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதற்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

நாளையதினம் பொங்கல் தினம் என்பதனால் வன்முறைகளை தவிர்த்து அமையான முறையில் எதிர்ப்புகளை வெளியிடுமாறு மாவை சேனாதிராஜா தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழிற்கான விஜயம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தாகவும், இந்த வருகையின் போது, காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை இராணுவத்தினருடன் நேரடியாக ஆராய்வதாகவும், ரணில் குறிப்பிட்டிருந்ததாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இருப்பதனால் ரணில் விக்கிரமசிங்க 

யாழிற்கு வருவதை சாதகமாக பரிசீலிக்கவேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் வருகையை சாதகமாக பரிசீலிக்கவேண்டும் - காணி பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - மாவை நாளைய தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ள நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தமக்கு அதில் பங்கேற்பதில் தடைகள் ஏற்படுமென தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் வருகை மற்றும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுகின்ற விடயம் தொடர்பாக 'சமூகம் மீடியா' மாவை சேனாதிராஜாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேள்விகளை எழுப்பியிருந்தது.இதற்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.நாளையதினம் பொங்கல் தினம் என்பதனால் வன்முறைகளை தவிர்த்து அமையான முறையில் எதிர்ப்புகளை வெளியிடுமாறு மாவை சேனாதிராஜா தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழிற்கான விஜயம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தாகவும், இந்த வருகையின் போது, காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை இராணுவத்தினருடன் நேரடியாக ஆராய்வதாகவும், ரணில் குறிப்பிட்டிருந்ததாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இருப்பதனால் ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு வருவதை சாதகமாக பரிசீலிக்கவேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement