• May 04 2024

தேர்தல் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! அனுர எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Nov 6th 2023, 6:53 pm
image

Advertisement

அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் , அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும், மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டுமென அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

“உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டும்.

எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை தவிர்க்க முற்பட்டால், அவர் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.

மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் ஏன் வீதிக்கு வருவதில்லை என சிலர் கேட்கின்றனர்.மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை, தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால், மக்கள் வீதியில் இறங்குவார்கள்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை மாற்றியமைப்பதற்கான அனைத்து சக்திகளையும் தேசிய மக்கள் சக்தி உள்ளடக்கியதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 



தேர்தல் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள். அனுர எச்சரிக்கை.samugammedia அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் , அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும், மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டுமென அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.“உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டும்.எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை தவிர்க்க முற்பட்டால், அவர் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னதாகவே செல்ல வேண்டும். மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் ஏன் வீதிக்கு வருவதில்லை என சிலர் கேட்கின்றனர்.மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை, தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால், மக்கள் வீதியில் இறங்குவார்கள்.அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை மாற்றியமைப்பதற்கான அனைத்து சக்திகளையும் தேசிய மக்கள் சக்தி உள்ளடக்கியதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement