• Nov 26 2024

வெப்பநிலை அதிகரிப்பால் பாதிப்பு; நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!

Chithra / Mar 24th 2024, 1:17 pm
image

 

உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் காலநிலை தலைவர் எரான் விக்கிரமரத்ன மற்றும் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரான ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு  நாடாளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும் ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையானது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அவர் எச்சரித்தார்.

இதன் காரணமாக பல்வேறு இழப்புக்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதன்படி, 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருந்தார்.

வெப்பநிலை அதிகரிப்பால் பாதிப்பு; நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை  உலகலாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் காலநிலை தலைவர் எரான் விக்கிரமரத்ன மற்றும் அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரான ருவான் விஜேவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு  நாடாளுமன்றம் உள்ளக அமைப்புகளுடனும் ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறு காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையானது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அவர் எச்சரித்தார்.இதன் காரணமாக பல்வேறு இழப்புக்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement