• May 18 2024

மின்சார வாகனங்கள் இறக்குமதி - அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்..! samugammedia

Chithra / May 16th 2023, 10:00 am
image

Advertisement

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாரிய சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மின்சார வாகனங்கள் இறக்குமதி - அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம். samugammedia வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாரிய சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement