• May 11 2024

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..! samugammedia

Chithra / May 17th 2023, 6:58 am
image

Advertisement

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் தொடர்புடைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள், அனுமதிப்பத்திரங்களை www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல். samugammedia இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் தொடர்புடைய முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள், அனுமதிப்பத்திரங்களை www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஆரம்பமாகவுள்ளது.பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement