நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று ராஜகிரியவில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் வழமையை விட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என நம்புவதாகவும், அதேவேளை அனைத்து மக்களையும் அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் கொழும்பில் இன்று முக்கிய கூட்டம். நாட்டில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று ராஜகிரியவில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.இதனிடையே வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் வழமையை விட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என நம்புவதாகவும், அதேவேளை அனைத்து மக்களையும் அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.