• Nov 06 2024

அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை; வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலை!

Chithra / Jul 29th 2024, 9:00 am
image

Advertisement


ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட சுற்றுநிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேவையான அறிவுறுத்தல்கள் குறித்த விசேட சுற்றுநிருபத்தில் அடங்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.


இதேவேளை இலங்கையின் அஞ்சல் திணைக்களம் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது மொத்த செலவீன அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார  தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது திணைக்களம் குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்

பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற  அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற   திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை; வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட சுற்றுநிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேவையான அறிவுறுத்தல்கள் குறித்த விசேட சுற்றுநிருபத்தில் அடங்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.இதேவேளை இலங்கையின் அஞ்சல் திணைக்களம் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது மொத்த செலவீன அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.அஞ்சல் கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார  தெரிவித்துள்ளார்.அத்துடன், தமது திணைக்களம் குறிப்பிடத்தக்க பணியாளர் வெற்றிடங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தேர்தல் தொடர்பான பணிகளை திறம்பட நிறைவேற்ற 1,000 முதல் 2,000 அஞ்சல் பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வுபெற்ற  அஞ்சல் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு தேசிய தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெற   திட்டமிட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement