• May 10 2024

அதிரடி காட்டும் இந்தியாவின் இராட்சத ப்ரம்மோஸ் ஏவுகணை!

Tamil nila / Dec 30th 2022, 3:16 pm
image

Advertisement

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தியா அதன் ப்ரம்மோஸ் ஏவுகணைகளை su-30 விமானங்களில் இருந்து ஏவி வெற்றிகரமாகப் பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. பரிசோதனையின் முக்கியத்துவம் என்னவென்றால், பாதுகாப்புத்துறை இவ்வளவு காலம் எதிர்பார்த்து வந்தது போல ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை 700km வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.


 இதற்கு முன்னர் ஏற்கனவே கடல் பதிப்பு ஏவுகணை 800km தாக்குதல் எல்லையை அடைந்ததாகக் கூறப்படுகின்ற போதும், அதற்கான சரியான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாமல் இருந்தது. எவ்வாறாயினும் தற்போதைய பரிசோதனை சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.


 அடுத்து இந்த பரிசோதனையில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயம், ஏவப்பட்ட விமானம். Su-30 விமானம் இந்திய வான்படையின் முதுகெலும்பு என அழைக்கப்படும் அளவிற்கு திறன் வாய்ந்ததாகவும் இந்தியாவிற்கு முக்கியமானதாகவும் இருக்கின்றன.இந்த இரண்டு முக்கிய ஆயுதங்களின் தகைமைகள் மற்றும் அவற்றின் ஒன்றிணைந்த செயற்பாடு எவ்வாறு இந்திய வான்படையின் திறனை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது என்பதை ஆய்வில் பார்க்கலாம். 



கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் பிரமோஸ் ஏவுகணைகள் கப்பல் இலக்கு ஒன்றை வெற்றிகரமாக தாக்கி அளித்து இருந்ததாக பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


தற்போதைய எல்லை அதிகரிப்பு வெற்றியை சாத்தியப்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்,  இந்திய வான் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியன ஒன்றிணைந்து செயல்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


ஏற்கனவே கடந்த மே 12 ஆம் தேதி பிரம்மோஸ் ஏவுகணைகளின் எல்லை அதிகரிக்கப்பட்ட பதிப்பு ஒன்று பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை இந்த வருடத்தின் இரண்டாவது முக்கிய பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பரிசோதனைகளும் su-30 விமானங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இன்றைய காலகட்ட போர் முறைகளுக்கு துல்லியமாக தாக்குதல் மேற்கொள்ள கூடியவையாகவும் அதிகமான தாக்குதல் எல்லை கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்பது பிரதான தேவைபாடாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை 700 முதல் 800 கிலோமீட்டர் வரையில் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


அதேபோல எஸ் யூ 30 விமானங்கள் 3000 கிலோமீட்டர் தாக்குதல் பரப்பினை கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த இரண்டு ஆயுதங்களும் இணைந்து செயல்பட்டால் எதிரி இலக்குகளை ஏறத்தாழ 3800 கிலோமீட்டர்க்கு அப்பால் இருந்து தாக்க முடியும் என்பது அதிகாரிகளது கருத்தாக இருக்கின்றது. பிரதானமாக இந்த இரண்டு ஆயுதங்களும் இணைந்து SEAD தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். 


இவை குறிப்பாக எதிரிகளின் பாதுகாப்பு தொகுதிகளை முன்னணியில் சென்று தாக்கி அளிக்கும் விதமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடமாடும் சீனாவின் போர்க்கப்பல்களை தாக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் எஸ் யூ 30 விமானங்கள் பிரமோஸ் ஏவுகணைகள் ஆகிய இரண்டையும் கொண்டு இலகுவாக தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என வான் படை தெரிவித்துள்ளது.



முதல் முறையாக இந்தியா 2020 ஆம் ஆண்டில் அதன் டைகர் ஷார்க் ஸ்காட்ரன் படையை எஸ் யூ 30 விமானங்களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கி தயார் செய்து இருந்தது. இந்த ஸ்கொட்ரன் இந்தியாவின் தஞ்சாவூர் பிரதேசத்தில் அதாவது தெற்கு பகுதியில் மூலோபாய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டு இருந்தது.


தமிழ்நாட்டில் இந்த ஸ்கொட்ரன் நிறுவப்படுவதால் இந்து சமுத்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் சீனாவின் நடமாட்டங்களை துல்லியமாக அவதானிக்க கூடியதாகவும் தேவை ஏற்படும் போது உடனடி தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்பது பாதுகாப்பு அமைச்சின் கணிப்பு. டைகர் ஷாக் ஸ்கோட்ரனில் மொத்தம் 18 போர் விமானங்கள் இயங்கி வருவதோடு அவற்றில் குறிப்பாக ஆறு எஸ் யூ 30 விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய நிலையில் தயார்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளன.



தற்போது இந்திய வான்படை இடம் உள்ள su-30 விமானங்களில் மொத்தமாக 40 விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மேலும் 20 விமானங்களை இந்த தகமைக்கு மேம்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல பிரம்மோஸ் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லையையும் 1500 கிலோமீட்டர் வரையில் அதிகரிப்பதற்கான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இப்போது மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு நோக்கி ஏவப்படும் பிரமோஸ் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2.65 டன் எடை கொண்டவையாக உள்ளன. இவை வருங்காலத்தில் அடுத்த தலைமுறை பிரமோஸ் என்ஜி ஏவுகணைகள் தயாரிக்கப்படும் போது ஒன்று 1.33 டன் அளவுக்கு எடை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக su-30 விமானம் ஒன்று நான்கு பிரமோஸ் ஏவுகணைகளையும் தேஜாஸ் போன்ற மென்போர் விமானம் ஒன்று இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகளையும் காவி செல்லக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டும் இந்தியாவின் இராட்சத ப்ரம்மோஸ் ஏவுகணை கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தியா அதன் ப்ரம்மோஸ் ஏவுகணைகளை su-30 விமானங்களில் இருந்து ஏவி வெற்றிகரமாகப் பரிசோதனையை நிறைவு செய்துள்ளது. பரிசோதனையின் முக்கியத்துவம் என்னவென்றால், பாதுகாப்புத்துறை இவ்வளவு காலம் எதிர்பார்த்து வந்தது போல ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை 700km வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏற்கனவே கடல் பதிப்பு ஏவுகணை 800km தாக்குதல் எல்லையை அடைந்ததாகக் கூறப்படுகின்ற போதும், அதற்கான சரியான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாமல் இருந்தது. எவ்வாறாயினும் தற்போதைய பரிசோதனை சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அடுத்து இந்த பரிசோதனையில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயம், ஏவப்பட்ட விமானம். Su-30 விமானம் இந்திய வான்படையின் முதுகெலும்பு என அழைக்கப்படும் அளவிற்கு திறன் வாய்ந்ததாகவும் இந்தியாவிற்கு முக்கியமானதாகவும் இருக்கின்றன.இந்த இரண்டு முக்கிய ஆயுதங்களின் தகைமைகள் மற்றும் அவற்றின் ஒன்றிணைந்த செயற்பாடு எவ்வாறு இந்திய வான்படையின் திறனை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது என்பதை ஆய்வில் பார்க்கலாம். கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் பிரமோஸ் ஏவுகணைகள் கப்பல் இலக்கு ஒன்றை வெற்றிகரமாக தாக்கி அளித்து இருந்ததாக பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போதைய எல்லை அதிகரிப்பு வெற்றியை சாத்தியப்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்,  இந்திய வான் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியன ஒன்றிணைந்து செயல்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த மே 12 ஆம் தேதி பிரம்மோஸ் ஏவுகணைகளின் எல்லை அதிகரிக்கப்பட்ட பதிப்பு ஒன்று பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனை இந்த வருடத்தின் இரண்டாவது முக்கிய பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பரிசோதனைகளும் su-30 விமானங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்றைய காலகட்ட போர் முறைகளுக்கு துல்லியமாக தாக்குதல் மேற்கொள்ள கூடியவையாகவும் அதிகமான தாக்குதல் எல்லை கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்பது பிரதான தேவைபாடாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை 700 முதல் 800 கிலோமீட்டர் வரையில் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேபோல எஸ் யூ 30 விமானங்கள் 3000 கிலோமீட்டர் தாக்குதல் பரப்பினை கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்த இரண்டு ஆயுதங்களும் இணைந்து செயல்பட்டால் எதிரி இலக்குகளை ஏறத்தாழ 3800 கிலோமீட்டர்க்கு அப்பால் இருந்து தாக்க முடியும் என்பது அதிகாரிகளது கருத்தாக இருக்கின்றது. பிரதானமாக இந்த இரண்டு ஆயுதங்களும் இணைந்து SEAD தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இவை குறிப்பாக எதிரிகளின் பாதுகாப்பு தொகுதிகளை முன்னணியில் சென்று தாக்கி அளிக்கும் விதமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடமாடும் சீனாவின் போர்க்கப்பல்களை தாக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் எஸ் யூ 30 விமானங்கள் பிரமோஸ் ஏவுகணைகள் ஆகிய இரண்டையும் கொண்டு இலகுவாக தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என வான் படை தெரிவித்துள்ளது.முதல் முறையாக இந்தியா 2020 ஆம் ஆண்டில் அதன் டைகர் ஷார்க் ஸ்காட்ரன் படையை எஸ் யூ 30 விமானங்களில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கி தயார் செய்து இருந்தது. இந்த ஸ்கொட்ரன் இந்தியாவின் தஞ்சாவூர் பிரதேசத்தில் அதாவது தெற்கு பகுதியில் மூலோபாய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டு இருந்தது.தமிழ்நாட்டில் இந்த ஸ்கொட்ரன் நிறுவப்படுவதால் இந்து சமுத்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் சீனாவின் நடமாட்டங்களை துல்லியமாக அவதானிக்க கூடியதாகவும் தேவை ஏற்படும் போது உடனடி தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்பது பாதுகாப்பு அமைச்சின் கணிப்பு. டைகர் ஷாக் ஸ்கோட்ரனில் மொத்தம் 18 போர் விமானங்கள் இயங்கி வருவதோடு அவற்றில் குறிப்பாக ஆறு எஸ் யூ 30 விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய நிலையில் தயார்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளன.தற்போது இந்திய வான்படை இடம் உள்ள su-30 விமானங்களில் மொத்தமாக 40 விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மேலும் 20 விமானங்களை இந்த தகமைக்கு மேம்படுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல பிரம்மோஸ் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லையையும் 1500 கிலோமீட்டர் வரையில் அதிகரிப்பதற்கான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போது மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு நோக்கி ஏவப்படும் பிரமோஸ் ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2.65 டன் எடை கொண்டவையாக உள்ளன. இவை வருங்காலத்தில் அடுத்த தலைமுறை பிரமோஸ் என்ஜி ஏவுகணைகள் தயாரிக்கப்படும் போது ஒன்று 1.33 டன் அளவுக்கு எடை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக su-30 விமானம் ஒன்று நான்கு பிரமோஸ் ஏவுகணைகளையும் தேஜாஸ் போன்ற மென்போர் விமானம் ஒன்று இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகளையும் காவி செல்லக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement