• Dec 16 2024

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் : தொழிற்பயிற்சி நிலைய 3 ஆவது ஆண்டு நிறைவு விழா

Tharmini / Dec 15th 2024, 2:54 pm
image

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை வாழைச்சேனையில்  இடம்பெற்றது.

வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜி.சுகந்தினி தலைமையில் நடைபெற்ற.

மேற்படி நிகழ்வில் சமூகசேவைகள் திணைக்கள அமைச்சின் மேலதிக செயலாளர் நாளிகா,பணிப்பாளர் தர்சினி கருணாரட்ன மற்றும் வன்னிகோப் நிறுவனத்தின் மட்டகளப்பு, அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் கெ.தர்மராஜ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மாணவர்களின் கலாசார நிகழ்வுடன் வரவேற்கப்பட்டதுடன் சமாதான புறாக்களும் விடப்பட்டன.

நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மாணவர்களின் ஆடை அலங்கார நிகழ்வு நடைபெற்றது.தேசிய மட்ட போட்டியில் 4 ஆவது இடத்தை பெற்ற நடன நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்விற்கான அணுசரணையை வன்னிக்கோப் நிறுவணத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் : தொழிற்பயிற்சி நிலைய 3 ஆவது ஆண்டு நிறைவு விழா சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமும் தொழிற்பயிற்சி நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாற்றுத் திறனாளிகள் தொழிற்பயிற்சி நிலையம் கும்புறுமூலை வாழைச்சேனையில்  இடம்பெற்றது.வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜி.சுகந்தினி தலைமையில் நடைபெற்ற.மேற்படி நிகழ்வில் சமூகசேவைகள் திணைக்கள அமைச்சின் மேலதிக செயலாளர் நாளிகா,பணிப்பாளர் தர்சினி கருணாரட்ன மற்றும் வன்னிகோப் நிறுவனத்தின் மட்டகளப்பு, அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் கெ.தர்மராஜ் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.இதன்போது அதிதிகள் மாணவர்களின் கலாசார நிகழ்வுடன் வரவேற்கப்பட்டதுடன் சமாதான புறாக்களும் விடப்பட்டன.நிலையத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மாணவர்களின் ஆடை அலங்கார நிகழ்வு நடைபெற்றது.தேசிய மட்ட போட்டியில் 4 ஆவது இடத்தை பெற்ற நடன நிகழ்வு இடம்பெற்றது.அத்துடன் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.மேற்படி நிகழ்விற்கான அணுசரணையை வன்னிக்கோப் நிறுவணத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement